ப்ளாக் எழுதவேண்டும் என்ற என்னுடைய நீண்டநாள் அரிப்பை சொரிய ஒரு நல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. அலுவலகத்தில் எல்லா வேலைகளையும் கொஞ்ச நாள் 'மறு உத்தரவு வரும் வரை' கிடப்பில் போடச்சொல்லி எங்கள் மேலதிகாரி காதில் தேன் ஊற்றினார், "ஆனால் வீட்டில் இருக்கக் கூடாது, வேலைக்கு வரவேண்டும்" என்று இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் அடுத்த செய்தியையும் சொன்னார்.
ஏ.ஸி குளிரில், சொகுசான சீட்டில், அவ்வப்பொழுது டீ அல்லது காபி, நொறுக்குத்தீனி, உலகத்தையே கண் முன் கொண்டுவரும் கணினி, இதைவிட என்ன வேணும்?! (இதுல சம்பளம் வேற).
"அமுக்குடா ஆக்ஸிலேட்டர" என்று மனம் சொன்னாலும், நான் 'கற்பனை குதிரை'யேறி தான் இந்த பயணத்தை தொடர வேண்டும். அதுவோ "'யு ட்யுபில்' (youtube) எதையாவது பார்" என்று கூறி சோம்பிக்கிடந்தது. சரி கழுத அது படுத்தமேனிக்கு கிடக்க, விடாமல் அதன் முதுகில் அமர்ந்து, இன்டர்நெட்டில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை (மிக முக்கியம், மேலதிகாரி கண்ணுக்கு எட்டாத தூரம்) எல்லா உலக ஞானத்தையும் பெரும் முயற்சியில் ஈடுபட்டேன்.
இனிமேல் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை அல்லது 'தெரியவில்லை' என்றானபோது, என் கற்பனை குதிரை மெதுவாக
எழுந்து
நின்று
பிறகு மெல்ல நடக்க ஆரம்பித்தது.
அதற்குள் டீயும் வடையும் வந்துவிட, சற்று ஒய்வு அப்புறம் வடையுடன் ஒரு நடை. இப்படியாக ஐந்து தேநீர் குவளைகளையும் அரை டஜன் வடைகளையும் கடந்திருக்கும் போது, காலவெள்ளத்தில் என் கற்பனை குதிரை நீந்த ஆரம்பித்திருந்தது. மிகச்சாதாரணமாக அது எதிர்நீச்சல் போட்டு, பின்னே பின்னே.. ... அந்த ஆனந்தமான 80பதுகளில் போய் மேய ஆரம்பித்தது.
'ஆட்டோ' சங்கர், PT உஷா, வளைகுடாப்போர், லாட்டரி சீட்டு, மலிவு விலை மது, திரைமலர், காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு, அலுமினிய கோல்கேட் பேஸ்ட், பாண் பராக், லிஜ்ஜட் பாப்பட், பவர் ஷூ, கபில்தேவ், குமரகுருபரர், பீம் பாய் பீம் பாய், 'ஏக் தோ தீன் சார் பான்ச் சே... ... தஸ்ஸு க்யாரா...' என்று கண்ட இடங்களில் மேய முயற்சி செய்தது. இனிப்புக்கடையில் பூட்டிவைத்த திருடன் போல், அதற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை, இளித்த வாயுடன் என்னை திரும்பிப் பார்த்தது.
இனி மேய்ந்த கதை ... ... ...